செப். 14-ம் தேதி காலை 10 மணிக்கு சமூக இடைவெளியுடன் கலைவாணர் அரங்கில் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்

சென்னை: வரும்  செப். 14-ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் கூடுகிறது என சட்டப்பரேவை செயலாளர் சீனிவாசம் அறிவித்துள்ளார். கொரோனா காரணமாக தனிமனித இடைவெளியை பின்பற்றி கலைவாணர் அரங்கில் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 14-ம் தேதி நடைபெறும் அலுவலக ஆய்வுக் கூட்டத்தில் பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி முடிவு செய்யப்படும் என கூறினார். கலைவாணர் அரங்கில் கூட்டத்தொடரை நடத்த சபாநாயகர் ஆய்வு செய்த நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்.14-ம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு முன்பாக எம்எல்ஏக்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்று வந்தது. கொரோனா பரவல் காரணமாக, மார்ச் 23-ம் தேதியோடு சட்டசபை நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டன. சட்டசபை விதிகளின்படி, கூட்டத்தொடர் 6 மாத இடைவெளியில் கூட்டப்பட வேண்டும். அதன்படி, வரும் செப்டம்பர் 23-ந் தேதிக்குள் மீண்டும் சட்டசபையை கூட்ட வேண்டும். சபாநாயகர் ப.தனபால், சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் கடந்த 22-ம் தேதி சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டசபை கூட்டம் செப்டம்பர் 14-ம்தேதி காலை 10 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

2020-21-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி ஜனவரி 9-ம் தேதி வரை நடைபெற்றது. அதன் பின்னர் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி தொடங்கியது. தமிழக நிதித்துறை அமைச்சரும் தமிழக துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2020-21-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அதனைத்தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு நடைபெற்றது.

Related Stories: