தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சிறப்பு ரயில்கள் செப்டம்பர் 15ம் தேதி ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை : தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சிறப்பு ரயில்கள் செப்டம்பர் 15ம் தேதி ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஏற்கனவே சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டு இருந்தது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கானது செப்டம்பர் 31ம் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் தளர்வுகளுள் ஒன்றான மாவட்டத்திற்குள் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் 7 சிறப்பு ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, திருச்சி - செங்கல்பட்டு இடையேயான சிறப்பு ரயில் சேவையும், மதுரையிலிருந்து விழுப்புரத்திற்கு இயக்‍கப்படும் அதிகவேக இன்டர்சிட்டி ரயில் சேவையும் ரத்து செய்யப்படுகிறது.கோவையிலிருந்து காட்பாடிக்‍கு செல்லும் அதிவேக இன்டர்சிட்டி ரயிலும், அரக்‍கோணத்திலிருந்து கோவைக்‍கு இயக்‍கப்படும் அதிவேக சிறப்பு ரயிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதேபோன்று, கோவையிலிருந்து மயிலாடுதுறைக்‍கு செல்லும் ஜனசதாப்தி சிறப்பு ரயிலும், திருச்சியிலிருந்து நாகர்கோவிலுக்‍கு இயக்‍கப்படும் அதிவேக இன்டர்சிட்டி சிறப்பு ரயிலும் ரத்து செய்யப்படுகின்றன.

Related Stories: