ரஷ்ய கூட்டு ராணுவப் பயிற்சியிலிருந்து இந்தியா விலகல்!: சீனா, பாகிஸ்தான் ராணுவம் பங்கேற்பதால் திடீர் முடிவு..!!

டெல்லி: ரஷ்யாவில் நடைபெறவுள்ள கூட்டு ராணுவ பயிற்சியில் இந்தியா பங்கேற்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் அந்த ராணுவத்துடன் இணைந்து கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட இந்தியா திட்டமிட்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கூட்டு ராணுவ பயிற்சியில் சீனா, பாகிஸ்தான் ராணுவங்களும் பங்கேற்கவிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

லடாக்கில் சீனாவின் மக்கள் ராணுவத்துடன் மோதல் போக்கு நீடிக்கும் நிலையில், அவர்கள் பங்கேற்கவுள்ள போர் பயிற்சியில் இந்திய ராணுவமும் இணைவது ஏற்புடையது இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் இந்த சூழலில் ராணுவ வீரர்களை அனுப்பி வைப்பதிலும் சிரமம் இருப்பதை சுட்டிக்காட்டி, கூட்டு ராணுவப் பயிற்சியில் பங்கேற்க இயலாது என்று ரஷ்யாவுக்கு பாதுகாப்புத்துறை சார்பில் தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது.

 இதனிடையே லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 14 மற்றும் 15ம் தேதி நிகழ்ந்த மோதலில், 19 வயதுள்ள சீன ராணுவவீரர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. 19 வயது சீன வீரரின் நினைவாக வைக்கப்பட்டுள்ள நினைவுக் கல்வெட்டு சீனாவின் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதில் கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவின் இழப்பு குறித்து முதல் ஆதாரம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: