திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே விளைநிலத்தில் உயர்மின் கோபுரம் அமைப்பு.., அத்துமீறி தனியார் நிறுவனம் செயல்படுவதாக புகார்...!!!

திருப்பூர்:  திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே விவசாய நிலத்தில் அத்துமீறி உயரழுத்த மின்கோபுரங்கள் அமைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் காதக்கோட்டை கிராமத்தில் தனியார் காற்றாலை நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்நிறுவனம் அங்குள்ள விவசாய விளைநிலங்களில், உயர்மின் கோபுரங்களை அமைத்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமைக்கப்பட்ட மின்கோபுரங்கள் அனைத்தும் தங்களின் அனுமதியை பெறாமல் அத்துமீறி போடப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக தனியார் நிறுவனத்தின் அத்துமீறிய செயலை தடுக்க வேண்டுமென்று விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். தொடர்ந்து, அனுமதியின்றி போடப்பட்டுள்ள கோபுரங்களை அகற்றிவிட வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உயர்மின் கோபுரம் அமைக்க கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததை கண்டித்து விவசாயிகள் கால்நடைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இழப்பீடு தொகையை உடனடியாக வழங்கவேண்டுமென்று அவர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, இழப்பீடு வழங்க தாமதப்படுத்தினால் உயிரை மாய்த்துக்கொள்ள போவதாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: