மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டியுள்ள தனியார் ரிசார்ட்: செப்.8க்குள் அகற்ற தாசில்தார் உத்தரவு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த தனியார் ரிசார்ட்டை வரும் செப்டம்பர் 8ம் தேதிக்குள் அகற்ற திருக்கழுக்குன்றம் தாசில்தார் உத்தரவிட்டுள்ளார். மாமல்லபுரத்தில் கிழக்கு கடற்கரை சாலை அமைக்கும் பணி நடந்தபோது, சாலையோரமாக இருசக்கர வாகனம் செல்வதற்கு தனி பாதை அமைக்கப்பட்டது. அதற்கு, தனியார் ரிசார்ட் நிர்வாகம், இருசக்கர வாகனம் செல்ல பாதை அமைத்தால், தங்களது ரிசார்ட்டுக்கு வருபவர்களுக்கு இடையூறு ஏற்படும் என தடுத்துள்ளது.

மேலும், சாலை அமைக்கும் நிறுவனமான, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்துக்கு ஒரு கணிசமான தொகை கொடுத்து, சாலை அமைக்கும் பணியை, அந்த இடத்தில் மட்டும் நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், அந்த இடத்தில் தற்போது வரை இருக்கர வாகனம் செல்ல பாதை இல்லை. இதையொட்டி, தனியார் ரிசார்ட் நுழைவாயில் முன்பு தற்போது வரை  43க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன. இந்நிலையில், தனியார் ரிசார்ட் ஆக்கிரமிப்பு சம்பந்தமாக, திருக்கழுக்குன்றம் தாசில்தாருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. இதையடுத்து, தாசில்தார் பர்வதம், மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் ஜேம்ஸ் ஆகியோர் தனியார் ரிசார்ட்டுக்கு நேரில் சென்று, நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். அப்போது, கிழக்கு கடற்கரை சாலையை ஆக்கிரமித்து இருப்பது தெரிந்தது. இதைெதாடர்ந்து, வரும் செப்டம்பர் 8ம் தேதிக்குள், ரிசார்ட் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என தாசில்தார் உத்தரவிட்டார். குறிப்பிட்ட தேதிக்குள் அகற்றாவிட்டால், நாங்களே நேரில் வந்து காலி செய்வோம் என கடுமையாக எச்சரித்து விட்டு சென்றார்.

Related Stories: