மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 106 போலீசாருக்கு கொரோனா உறுதி: காவல்துறையில் மொத்த பாதிப்பு 14,295-ஆக உயர்வு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 106 போலீசாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கொரோனா 209 நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் வாதிகள், அதிபர்கள், மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் என  அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்ட அதாவது மார்ச் 24 ம் தேதி முதல் இந்திய முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு அமலில் இருந்த போதிலும் தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுமுடக்கத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்கள் வேலை இல்லாமல், பணம் இல்லாமல் உணவுக்கு தவித்து வருகின்றனர்.

அப்படி ஒருபக்கம் இருந்தாலும் ஊரடங்கு அமலில் இருப்பதால் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் முன்னின்று காவல்துறையினர் பணியாற்றி வருகின்றனர். இதனால் இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது.  கொரோனா ஊரடங்கு காலத்தில் பணியாற்றும் காவல்துறையினருக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது. அதிக காவல்துறை அதிகாரிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலம் மகாராஷ்டிரா ஆகும். இந்நிலையில், மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 106 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை 14,295 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா நோய்க்கு இன்று மேலும் 2 காவலர்கள் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 11,545 காவலர்கள் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை கொரோனாவுக்கு 2,604 காவலர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: