திருநெல்வேலி மாவட்டம் கொடுமுடியாறு அணையிலிருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சென்னை: கொடுமுடியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகள் கோரிக்கைகள் விடுத்திருந்தனர். எனவே கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து நாங்குநேரி மற்றும் இராதாபுரம் வட்டங்களிலுள்ள வள்ளியூரான்கால், படலையார்கால் மற்றும் ஆத்துக்கால் ஆகியவற்றின் மூலம் பாசனம் பெறும் 2548.94 ஏக்கர் பாசன நிலங்களுக்கு கார் பருவ சாகுபடிக்காக வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் நவம்பர் 25 வரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் விநாடிக்கு 50 க.அடி மிகாமல் தண்ணீர் திறந்து விடவும், அணைக்கு கூடுதல் நீர்வரத்து இருக்கும் பட்சத்தில், முன்னுரிமை அளிக்கப்பட்ட 2548.94 ஏக்கர் நிலங்களின் குறைந்தபட்ச தேவைக்கு கூடுதலாக உள்ள நீரினை வடமலையான்கால் மூலம் பாசனம் பெறும் 3231.97 ஏக்கர் நிலங்களுக்கு திறந்துவிடவும் கூறியுள்ளார். மேலும் நாள் ஒன்றுக்கு விநாடிக்கு 100 கன அடி வீதம், நீர் வரத்து மற்றும் இருப்பைப் பொறுத்து, தேவைக்கேற்ப, தண்ணீர் திறந்துவிடவும் ஆணையிட்டுள்ளார். எனவே விவசாயிகள் நீரினை சிக்கனமாக பயன்படுத்தி பயன் பெருமாய் கூறினார்.

Related Stories: