மத்திய அரசின் குசும் திட்டத்தின் கீழ் விவசாய நிலங்களில் மின் மீட்டர் பொறுத்த தமிழக அரசு தீர்மானித்துள்ளதாக தகவல்..!!

சென்னை: விவசாய நிலங்களில் மின் மீட்டர் பொருத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் விவசாய பயன்பாட்டிற்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பாக விவசாய பயன்பாட்டிற்கு வழங்கக்கூடிய மின்சாரத்திற்கு மீட்டர் பொருத்தும் பணிகளானது நடைபெற்றது. இதன் காரணமாக இலவச மின்சாரம் பறிபோகும் வாய்ப்பிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

இருப்பினும் இதன் பயன்பாடு குறித்து அறிந்துகொள்ளவே மீட்டர் பொருத்துவதாக தமிழக அரசு விளக்கமளித்திருந்தது. இந்த சூழலில் மீண்டும் மின் மீட்டரை பொருத்துவதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது. இது நேரடியாக அல்லாமல் மத்திய அரசின் குசும் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்படவிருக்கிறது.

குறிப்பாக விவசாய மோட்டர்களுடன் சோலார் மோட்டார்களை இணைத்து அதற்கென நெட் மீட்டர் பொறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை விவசாயிகள் தங்களது தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்வதன் மூலம், இதர உபரி மின்சாரத்தை அவர்கள் கிரிட்டுகளுக்கு வழங்க ஏற்படும் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுளள்து. இதன்  மூலம் உபரியாக வழங்கக்கூடிய மின்சாரத்திற்கான தொகையையும் மின்சார வாரியம் விவசாயிகளுக்கு வழங்கவிருக்கிறது.

இந்த திட்டத்தை தமிழக அரசு விரைவில் செயல்படுத்தப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விவசாயிகள் பயன்படுத்தியது போக மீதமுள்ள மின்சாரம் மின் தொகுப்பிற்கு வழங்கப்படும் போது விவசாயிகள் வழங்கும் மின்சாரத்திற்கு யூனிட்டுக்கு தலா ரூ.3.20 அரசு வழங்கும். தமிழகத்தில் மொத்தம் 21.40 லட்சம் விவசாயத்திற்கான மின் இணைப்புகள் உள்ளன. பல லட்சம் பேர் விவசாய இணைப்பு கோரிய விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.

 குசும் திட்டம் என்பது மத்திய அரசின் ஒரு திட்டமாகும். சோலார் மின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக இந்த திட்டமானது செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மின் மீட்டர்களை பொருத்துவதற்கான பணிகள் இன்னும் சில நாட்களில் துவங்கப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: