ஆன்லைன் செஸ் போட்டி: அரையிறுதி போட்டிக்கு முன்னேறிய சிறுவன் பிரக்னா நந்தாவுக்கு முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து

சென்னை: சர்வதேச செஸ் கூட்டமைப்பின் ஆன்லைன் செஸ் போட்டியில் அரையிறுதி போட்டிக்கு முன்னேறிய பிரக்னாநந்தாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்தனர். சர்வதேச செஸ் கூட்டமைப்பு ஆன்லைன் செஸ் போட்டிகளை ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 30 வரை நடந்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சர்வதேச செஸ் போட்டி ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பாக விளையாடிய சென்னை சிறுவன் பிரக்னா நந்தா(15) வெற்றி பெற்றுள்ளார்.

இதன் மூலம் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் ஆன்லைன் செஸ் போட்டியில் அரையிறுதி போட்டிக்கு முன்னேறிய சிறுவன் பிரக்னா நந்தாவுக்கு முதலமைச்சர் பழனிசாமி அவரது டுவிட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இறுதி சுற்றிலும் வெற்றி பெற்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை தேடி தர வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் சிறுவன் பிரக்னாநந்தா இறுதிப் போட்டியிலும் வெற்றி வாகை சூடி சாதனை படைக்க துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ட்வீடரில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: