இந்தியாவில் உயர் பொறுப்பாளர்களை தாக்கி வரும் கொரோனா: ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரனுக்கு தொற்று உறுதி..!!

ராஞ்சி: ஜார்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சிபு சோரனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவரது மனைவி ரூபி சோரனுக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு பலமடங்கு அதிகரித்து வரும் நிலையில் தற்போது அடுத்த கட்டமாக பல உயர் அதிகாரிகளும் முன்னிலைப் பணியாளர்களும் கிருமிப் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதில் மருத்துவர்களும் சுகாதாரத் துறையினரும் பாதிக்கப்படுவது பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் மத்திய மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்றோருக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இதனையடுத்து, தற்போது ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவரது மனைவி ரூபி சோரனுக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த தகவலை சிபுசோரன், ரூபி சோரன் தம்பதியரின் மகனும், மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அவரது ட்விட்டர் பதிவு மூலம் நேற்று தெரிவித்துள்ளார்.

அதில் அவர் தனது தந்தைக்கும், தாய்க்கும் வெள்ளிக்கிழமை இரவு கொரோனா தொற்று உறுதியானதாகவும், அவர்கள் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெறுவதாகவும் தெரிவித்துள்ளார். நாட்டின் நல்வாழ்த்துகளுடனும், ஜார்கண்ட் மக்களின் வாழ்த்துகளுடனும் அவர்கள் விரைவில் நம்மிடையே திரும்பி வருவார்கள் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் வருகின்ற திங்களன்று முதல்வர் ஹேமந்த் சோரன், மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு வரும் திங்களன்று கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: