மதுரை மீனாட்சி கோயிலில் முக்குறுணி விநாயகர் பூஜை இணையத்தில் தரிசிக்கலாம்

மதுரை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மீனாட்சி கோயில் முக்குறுணி விநாயகருக்கு 18 படி மாவினால் ஆன பெரிய கொழுக்கட்டை செய்து நடத்தப்படும் சிறப்பு பூஜையை பக்தர்கள் தரிசித்து வணங்க வசதியாக இணையம் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மதுரை மீனாட்சி கோயில் இணை கமிஷனர் செல்லத்துரை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மீனாட்சியம்மன் கோயில் சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு, சிறப்பு பூஜை இன்று நடத்தப்படுகிறது. தொடர்ந்து 18 படியால் ஆன பெரிய கொழுக்கட்டை செய்யப்பட்டு, காலை 10.45 முதல் 11.15 மணி வரை பூஜை நடத்தப்படும்.

கோயிலுக்குள் பக்தர்கள் வருவதற்கு தடை உள்ள நிலையில், இந்த பூஜை நிகழ்ச்சிகள் இணையம் மூலம் ஒளிபரப்பப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறை இணைய தளமான www.tnhrce.gov.in மற்றும் மீனாட்சி கோயில் இணையமான www.maduraimeenakshi.org மற்றும் திருக்கோயிலின் maduraimeenakshi youtube அலைவரிசையிலும் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே பிரார்த்தித்து, தரிசனம் செய்ய வேண்டுகிறோம்’’ என தெரிவித்துள்ளார்.

Related Stories: