அசோக் லவாசாவுக்கு பதிலாக தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம்

புதுடெல்லி அசோக் லவாசா ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அவரது இடத்துக்கு இந்திய தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2018 ஜனவரியில், இந்திய தேர்தல் ஆணையராக அசோக் லவாசா நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் 2022 வரை உள்ளது. இந்நிலையில், ஆசிய வளர்ச்சி வங்கியின் துணை தலைவர் திவாகர் குப்தா இந்த மாதம் ஓய்வு பெறுவதை தொடர்ந்து, அந்த பதவிக்கு அசோக் லவாசா நிமிக்கப்படுவதாக மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது.

இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து அசோக் லவாசா ராஜினாமா செய்தார். வரும் 31ம் தேதி விடுவிக்கப்படுகிறார். இவர், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு அடுத்த மூத்த தேர்தல் ஆணையராக இருந்தவர்.  இதை தொடர்ந்து, அசோக் லவாசா இடத்துக்கு புதிய தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஜார்கண்டை சேர்ந்த 1984ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான ராஜீவ் குமார், மத்திய நிதித்துறை செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நிதிச்சேவை செயலாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: