கைது செய்ய முயன்ற போது போலீசார் மீது தாக்குதல்: சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கர் போலீசாரால் சுட்டுக்கொலை... காவல்துறைக்கு பாராட்டு

சென்னை: சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கர் போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை முயற்சி, கஞ்சா விற்பனை என பல்வேறு குற்றவழக்குகளில் தேடப்பட்ட ரவுடி சங்கர், சென்னை அயனாவரத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார் ரவுடி சங்கரை அயனாவரத்தில் சுற்றி வளைத்தனர்.

தொடர்ந்து, சங்கரை போலீசார் கைது செய்ய முயன்றபோது, காவலர் முபராக்-ஐ ரவுடி சங்கர் அரிவாளால் தாக்கியதால், காவலர் படுகாயமடைந்தார். இதனையடுத்து, தங்களை பாதுகாத்துக்கொள்ள ரவுடி சங்கரை ஆய்வாளர் நடராஜன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தார். சுட்டுக்கொல்லப்பட்ட சங்கர் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ரவுடி சங்கர் வெட்டியதால் படுகாயமடைந்த காவலர் முபராக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னையில் ரவுடி போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், ரவுடி சுட்டுக்கொலை செய்த காவல்துறைக்கு பல்வேறு தரப்பில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: