ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால் மூப்பனார் நினைவு நாளில் வீட்டிலேயே அஞ்சலி: ஜி.கே.வாசன் வேண்டுகோள்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

வரும் ஆகஸ்டு 30ம் தேதி, ஜி.கே.மூப்பனாரின் 19ம் ஆண்டு நினைவு நாள். ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் ஒன்று கூடி அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துவோம். ஆனால் இந்த ஆண்டு, அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது என்பதால் அவ்வாறு அஞ்சலி செலுத்த இயலவில்லை. நாட்டின் நலன், மக்கள் நலன் கருதி, அரசின் கோட்பாடுகளை கடைபிடிக்கும் வகையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில், அன்றைய தினம் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள். இத்தகைய சூழலில், ஜி.கே.மூப்பனாரின் நலம் விரும்பிகளும், தமாக நண்பர்களும், அவர்களது குடும்பம், குழந்தைகள், உற்றார் உறவினர்கள் நலன் கருதியும், தாங்கள் அனைவரும் அவரவர் இல்லங்களில் ஜி.கே.மூப்பனாரின் படத்தை வைத்து மரியாதை செலுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன். தமாகா நிர்வாகிகள் அனைவரும் இதை கண்டிப்போடு தவறாமல் கடைபிடிக்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: