பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய சொத்துக்களை விற்க மாட்டோம் : ஐகோர்ட்டில் தேவஸ்தானம் உறுதி

திருமலை :  திருப்பதி  ஏழுமலையான் கோயிலுக்கு சொந்தமான பயனற்ற சொத்துக்களை விற்க தேவஸ்தானம்  முடிவு செய்தது. குறிப்பாக, பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தமிழகத்தின்  பல்வேறு மாவட்டங்களில் உள்ள 23 சொத்துக்கள் மற்றும் வெளிமாநிலங்களில் உள்ள  சொத்துக்கள் என 50 சொத்துக்களை விற்க திட்டமிட்டது.  இதை எதிர்த்து ஆந்திர  மாநில பாஜக மூத்த தலைவர் அமர்நாத், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், தேவஸ்தானம் சார்பில் நேற்று முன்தினம் பதில் மனு  தாக்கல் செய்யப்பட்டது.

அந்த  அறிக்கையில், ‘தேவஸ்தானத்திற்கு  சொந்தமான 50 சொத்துக்களை விற்க கடந்த 2016 ஜனவரியில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானத்தை ரத்து செய்து  மாநில அரசு  கடந்த மே 25ம் தேதி புதிய அரசாணை  வெளியிட்டுள்ளது. இனி, கோயில் சொத்துக்களை விற்கக்கூடாது  என்ற முடிவை தேவஸ்தானம் எடுத்துள்ளது,’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: