மதுரையில் சட்டம் ஒழுங்கு நிலவரம், காவல்துறை பணிகள் குறித்து டி.ஜி.பி திரிபாதி ஆலோசனை!: உதவி ஆணையர்கள், அதிகாரிகள் பங்கேற்பு..!!

மதுரை: மதுரையில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்தும் காவல்துறை பணிகள் குறித்தும் டி.ஜி.பி திரிபாதி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றவாளி ஒருவரை பிடிக்க சென்ற காவலர்கள் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் காவலர் சுப்பிரமணி என்பவர் தலை சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு காரணமாக குற்றவாளியும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். இந்நிலையில் இந்த சம்பவத்தை நேரடியாக களத்தில் சென்று விசாரணை செய்வதற்காக தமிழகத்தின் டி.ஜி.பி திரிபாதி நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு தற்போது மதுரை வந்துள்ளார்.

இங்கிருந்து தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களுக்கு சென்று அங்கு சம்பவம் நடந்தது என்ன? மற்றும் இறந்துபோன காவலருக்கு நேரடியாக அஞ்சலி செலுத்துவதற்காக தற்போது புறப்படவுள்ளார். மதுரைக்கு நேற்றிரவு வந்த டி.ஜி.பி திரிபாதி அவர்கள் தனியார் விடுதியில் தங்கியுள்ளார். தற்போது மதுரை மாநகர காவல்துறையின் ஆணையர், துணை ஆணையர்கள் மற்றும் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் டி.ஜி.பி திரிபாதியுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக இந்த ஆலோசனை என்பது மதுரை மற்றும் தென் மாவட்டங்கள் இருக்கக்கூடிய சட்ட ஒழுங்கு பிரச்சனைகள், காவல்துறை சம்பந்தப்பட்ட பணிகள் குறித்த பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை நிறைவு பெற்றவுடன் தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களுக்கு டி.ஜி.பி திரிபாதி செல்லவுள்ளார். அச்சமயம் செய்தியாளர்களை சந்திப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது.

Related Stories: