ஜம்முவில் முதல் முறையாக சுதந்திர தின பாதுகாப்பில் சிஆர்பிஎப் பெண் வீரர்கள்: சீருடையில் கம்பீரம்

காஷ்மீர்:  ஜம்மு காஷ்மீரில் முதன் முறையாக சிஆர்பிஎப் பெண் வீரர்கள் சுதந்திர தின விழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜம்மு காஷ்மீரில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு நேற்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நகரில் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.  முதல் முறையாக, கம்பீரமான சீருடையில் துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் பெண் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

வர்த்தகம் மிகுந்த பகுதியான லால்சவுக் மற்றும் கோத்திபாக் காவல்நிலைய எல்லை உட்பட பல்வேறு பகுதிகளில் துணை ராணுவத்தை சேர்ந்த பெண் வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். சிஆர்பிஎப்பின் 232 பட்டாலியனை சேர்ந்த இந்த பெண் வீரர்களில் ஒருவர் கூறுகையில், ‘‘சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளோம். ஆண் சிஆர்பிஎப் வீரர்களுக்கு எந்தவிதத்திலும் நாங்கள் குறைவானர்கள் இல்லை,” என்றார்.

Related Stories: