கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு

சென்னை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் இன்று 7வது ஞாயிற்றுக்கிழமையாக எந்தவித தளர்வும் இன்றி முழு  ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் எந்தவித தளர்வுகளும்  இல்லாமல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மாநிலம் முழுவதும் இன்று அதிகாலை முதல் நள்ளிரவு 12 மணி வரை முழு  ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இன்று அத்தியாவசிய தேவைகளான பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், பத்திரிகைகள்  மட்டுமே இயங்கும். காய்கறி, மளிகை கடைகள், உணவகங்கள், இறைச்சி மற்றும் மீன் கடைகள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும்.  இதேபோன்று மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்படும்.

தமிழகம் முழுவதும் இதுபோன்று ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவது இது 7வது முறையாகும். தமிழகத்தில் இன்று முழு  ஊரடங்கு என்பதால், நேற்று (சனி) அனைத்து காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட், ஜவுளிக்கடைகளில் கூட்டம் அலை மோதியது. இந்த பகுதிகளில்  மக்கள் சமூகஇடைவெளி எதுவும் கடைபிடிக்காமல் ஏராளமானோர் திரண்டதால் கொரோனா தொற்று ஏற்படும் ஆபத்து அதிகரித்துள்ளது. இதேபோன்று  சென்னை, விழுப்புரம், திருச்சி, சேலம், மதுரை, நெல்லை, கோவை, பொள்ளாச்சி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட நகர் பகுதிகளில் அமைந்துள்ள  காய்கறி மற்றும் மீன் மார்க்கெட் பகுதிகளில் பொதுமக்கள் அதிகளவில் கூடினர். போலீசார் எவ்வளவோ அறிவுறுத்தியும், பொதுமக்கள் அதை  கண்டுகொள்ளவில்லை.

Related Stories: