முதல்வர் வேட்பாளர் யார்?: சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை..!!

சென்னை: முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி அமைச்சர்கள் முரண்பட்ட கருத்து கூறியதை அடுத்து அ.தி.மு.க நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.  அ.தி.மு.க-வின் அடுத்த முதலமைச்சராக யார் போட்டியிடப்போகிறார்கள் என்ற சர்ச்சை அதிகளவில் வாதிக்கப்பட்டு வந்துள்ளது. அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, உதயகுமார் ஆகியோர் மாறுபட்ட கருத்துக்களை தெரித்ததன் காரணமாக தற்போது அதிமுகவிற்குள்ளான குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. அ.தி.மு.க-வில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும், ஓ. பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்.

இந்த நிலையில் முதலமைச்சர் வேட்பாளராக முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்படுவர் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்திருந்தார். அதேபோன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் முடிந்ததற்கு பின்பாக முதலமைச்சரை தேர்ந்தெடுப்பார்கள் என்ற கருத்து தெரிவித்துள்ளனர். இவ்வாறு மாறுபட்ட கருத்தின் காரணமாக அ.தி.மு.க -வில் சர்ச்சையும், முரண்பாடும் எழுந்துள்ளது.

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள் இதுகுறித்த ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். இதற்காக ஜெ.பி. முனுசாமி, சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் ஆகியோர் வருகை தந்துள்ளனர். சற்று நேரத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. அ.தி.மு.க-வை பொறுத்தவரை முதல்வர் வேட்பாளராக யாரை முன்னிறுத்தி 2021ம் ஆண்டு தேர்தலை சந்திக்க இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுந்த நிலையில், இன்று நடைபெறக்கூடிய ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

Related Stories: