ஆகஸ்டு 17ம் தேதி முதல் அரசு பள்ளிகளில் 1,6,9ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை..: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: ஆகஸ்டு 17ம் தேதி முதல் அரசு பள்ளிகளில் 1,6,9ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக எந்த பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை இன்னும் தொடங்கப்படவில்லை. இன்று நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய உயர்கல்வித்துறை செயலாளர், வரும் டிசம்பர் மாதம் வரை பள்ளி கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தார். அதனால் எப்போது தான் பள்ளிகள் திறக்கும் என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது. மேலும் தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கொரோனா வைரஸின் தாக்கம் குறையவில்லை. கல்வியாளர்கள், பெற்றோர் கருத்துகள் அறிந்த பின்பு கொரோனா தாக்கம் குறைந்த பின்பு பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார். பள்ளிகளை திறக்க தற்போது சாத்தியக்கூறுகளே இல்லை. 1,6,9 வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17ம் தேதி முதல் சேர்க்கை நடைபெறும். 11ம் வகுப்பு ஆகஸ்ட் 24ம் தேதி முதல் சேர்க்கை நடபெறும். மாணவர் சேர்க்கை அன்றே மாணவர்களுக்கு இலவச நோட்டுகள் மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். சமூக இடைவெளி மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் எந்த விதமான குழப்பமும் இல்லை, எனத் தெரிவித்தார்.

Related Stories: