ஒரே நாளில் 53,601 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22.68 லட்சத்தை தாண்டியது: இதுவரை 45,257 பேர் பலி.!!!

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 22.68 லட்சத்தை கடந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 15.83 லட்சத்தை தாண்டியது. நாட்டில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 53,601 பேர்  கொரோனா நோய் தொற்றின் காரணமாக புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின்  மொத்த எண்ணிக்கையானது 22,68,675 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6,39,929 பேர் சிகிச்சை பெற்று வரும்  நிலையில், 15,83,489 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரே நாளில் மேலும் 871 உயிரிழப்புக்கள் பதிவாகி உள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 45,257 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 69.33% ஆக உயர்ந்துள்ள நிலையில், இறப்பு விகிதம் 2.00% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை  பெறுபவர்கள் விகிதம் 28.66% ஆக குறைந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று 5,914 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கை 3,02,815ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 2,44,675 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 6,037 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றினால் 53,099 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மட்டும் 114 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 5,041 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: