இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில்தான் 69 தனியார் கொரோனா சோதனை மையங்களுக்கு அனுமதி: சென்னையில் 30 மையங்கள்; ஐசிஎம்ஆர் தகவல்

சென்னை: இந்திய அளவில் தமிழகத்தில் 69 தனியார் கொரோனா பரிசோதனை மையங்களுக்கு ஐசிஎம்ஆர் அனுமதி அளித்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 30 மையங்கள் செயல்பட்டுவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அதை கண்டறிவது தான் ஒரே வழி என்று உலக சுகாதார அமைப்பு, ஐசிஎம்ஆர் உள்பட பல்வேறு அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் அரசு மட்டும் அல்லாமல் தனியாருக்கும் கொரோனாவை பரிசோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.

அந்த வகையில் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகத்தில்தான் அதிகளவில் கொரோனா பரிசோதனை நடக்கிறது. தினசரி 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுகிறது. தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி மட்டும் 70 ஆயிரத்து 186 பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதுவரை 32.25 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தனியார் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. குறிப்பாக இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகத்தில் தான் அதிக தனியார் பரிசோதனை மையங்கள் செயல்பட்டுவருகிறது.

ஆகஸ்ட் 9ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் 61 அரசு பரிசோதனை மையங்கள் மற்றும் 68 தனியார் பரிசோதனை மையங்கள் உட்பட மொத்தம் 129 பரிசோதனை மையங்கள் செயல்பட்டுவருகிறது. கடந்த ஏப்ரல் மாத இறுதி வரையில் தமிழகத்தில் 11 மையங்கள் மட்டுமே இருந்தது. மே மாத இறுதியில் இந்த எண்ணிக்கை 29 ஆகவும், ஜூன் மாத இறுதியில் இந்த எண்ணிக்கை 43 ஆகவும் அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து ஜூலை மாத இறுதியில் 61 தனியார் பரிசோதனை மையங்கள் செயல்பட்டுவந்தது. தற்போதையை நிலவரப்படி 68 பயிற்சி மையங்கள் செயல்பட்டுவருகிறது.

Related Stories: