கிருஷ்ண ஜெயந்தி முதல்வர் வாழ்த்து

சென்னை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி:  பகவத் கீதையை உலகிற்கு அருளிய பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த இத்திருநாளில், பகவத் கீதையின் போதனைகளான அனைவரிடத்திலும் அன்பு செலுத்துதல், பலன் கருதாது கடமையை செய்தல், பற்றற்று இருத்தல், எளிமையாக அடக்கத்துடன் வாழ்தல் போன்றவற்றை மக்கள் அனைவரும் வாழ்வில் பின்பற்றி, மகிழ்வுடன் வாழ்ந்திட வேண்டும். அனைவருக்கும் எனது மனமார்ந்த ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் மக்கள் அனைவரும் கீதையின் உபதேசங்களை பின்பற்றி வாழ்ந்திடுவோம். உலகில் அமைதியும், மகிழ்ச்சியும் தலைத்தோங்கிட அனைவரும் ஒன்றுப்பட்டு உழைத்திடுவோம். அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி திருநாள் நல்வாழ்த்துகள். பாஜக தலைவர் எல்.முருகன்: மக்களின் பிரதான சேவகனாய் கண்ணன் வாழ்ந்தான் என்று சொன்னால் மிகையாகாது. கீதையை மனதிற் கொண்டு, பற்றற்று, மாபெரும் கர்ம யோகிகளாய் நாம் அனைவரும் வாழ்வோம். உலகெங்கிலும் உள்ள கிருஷ்ண பக்தர்கள் அனைவருக்கும், தமிழர்களுக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.

Related Stories: