இ-பாஸ் முறையை அடியோடு ரத்து செய்க : தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்!!

சென்னை :இ-பாஸ் முறையை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்வதன் மூலமாக கொரோனா பரவல் வாய்ப்புகள் அதிகரிக்கிறது. அதனால் அவசரத்தேவைகள் மற்றும் திருமணம், துக்க நிகழ்வுகளுக்காக மட்டுமே மக்கள் மாவட்டத்தை விட்டு செல்ல வேண்டும் என்றும் அதற்காக இபாஸ் பெற்றுக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அரசு அறிவித்தது.தமிழ்நாடு கோவிட்-19 இ-பாஸ் வெப்சைட் உருவாக்கப் பட்டுள்ளது.

அத்தியாவசியப் பணிக் காக செல்லும் 7 துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் இந்த இ-பாஸ் நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நெருங்கிய உறவினர்கள் மரணம், அவசர மருத்துவ சிகிச்சை ஆகியவற்றுக்காக அருகில் உள்ள மாவட்டங்களுக்குச் செல்ல சான்றுகள் வைத்து விண்ணப்பித்தாலும் பெரும் பாலான விண்ணப்பங்கள் நிராகரிக் கப்படுகின்றன.அதே சமயம் அதிகாரிகள், புரோக்கர்கள் வழியாக, ஒரு, இ-பாஸ்க்கு, 2,000 ரூபாய் முதல் ரூ 5 ஆயிரம் வரை கொடுத்து இபாஸ் பெறுவதாக புகார் வந்த வண்ணம் உள்ளன. தினமும் ஒரு சிலருக்கு மட்டும் பெயளரவுக்கு இ-பாஸ் வழங்குவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. தற்போது விண்ணப்பதாரர்கள் இ-பாஸ் பெற அதிகாரிகள், ஆளுங்கட்சியினரிடம் பரிந்துரை செய்ய வேண்டி உள்ளது.

இ-பாஸ் நடைமுறையால் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் தவிர மற்றவர்கள் வாழ்வாதார இடங்களுக்கும், உறவினர் திருமணங்களுக்கும், துக்க நிகழ்வுகளுக்கும் செல்ல முடியாமல் மிகுந்த இன்னலுக்கு ஆளாகிவருகின்றனர். ஊரடங்கு விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்திவிட்டு மாவட்டம் விட்டு மாவட்டம், மாநிலம் விட்டு மாநிலம் செல்ல இ-பாஸ் தேவையில்லை என்று அறிவித்துள்ளது.

ஆனால் கொரோனா தொற்றை கட்டுபடுத்துவதில்,  தடுப்பு நடவடிக்கைகளிலும் தமிழகம் தான் பிற மாநிலங்களுக்கு முன்னோடி, வழிகாட்டி என கூறி கொள்ளும் முதல்வர், இபாஸ் முறையை பல மாநிலங்கள் ரத்து செய்துள்ள போதிலும், தமிழகத்தில் மக்களின் வாழ்வதாரத்தை கேள்வி குறியாக்கும் இபாஸ் முறையை ரத்து செய்ய மறுப்பது ஏன் என்பது மர்மமாக உள்ளது.

இபாஸ் வழங்குவதன் மூலம் அரசுக்கு வருவாய் வரவதாக இருந்தால் கூட அதனை ஒரு வகையில் ஏற்று கொள்ளாலாம், ஆனால் புரோக்கர் மற்றும் சில அதிகாரிகள் இபாஸ் முறையை தவறாக பயன்படுத்தி, அதன் மூலம் நாள்தோறும் லட்சகணக்கான பணத்தை தவறுதலாக சம்பாத்தி வருகின்றனர். இந்த முறைகேட்டிற்கு ஏன் முற்றுபுள்ளி வைக்க முதல்வர் தயங்குகிறார் என தெரியவில்லை. ஆகவே கொரோனா தொற்றால் மனஅழுத்தத்தில் கவலையிலும், அச்சத்திலும் உள்ள மக்களின் இனி வாட்டி வதைக்காமல் இபாஸ் முறையை ரத்து செய்ய வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் தமிழக அரசை வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: