'கோவிஷீல்டு'என்ற கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் வசிக்கும் 10 கோடி பேருக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் தகவல்..!!

மும்பை: கோவிஷீல்டு என்ற கொரோனா தடுப்பூசி 2021-ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் வசிக்கும் பத்து கோடி பேருக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது. ஒடிசா மாநிலம், புவனேஸ்வரைச் சேர்ந்த, சீரம் நிறுவனம், உலகிலேயே அதிக அளவிலான தடுப்பூசிகளை தயாரித்து வருகிறது. இந்நிறுவனம், பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலை உருவாக்கியுள்ள, கோவிஷீல்டு என்ற கொரோனா தடுப்பூசியை, ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க உள்ளது. கடந்த மாதம், கொரோனா தடுப்பூசியை, மனிதர்களிடம் செலுத்தி பரிசோதிப்பதற்கான அனுமதியை, சீரம் நிறுவனம் பெற்றது.

அதனைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட பரிசோதனை முடிவுகளை, மத்திய மருந்துகள் தரக் கட்டுப் பாட்டு கழகத்தைச் சேர்ந்த, வல்லுனர் குழு ஆய்வு செய்தது. இத்துடன், ஆக்ஸ்போர்டு பல்கலை மேற்கொண்ட, முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வு முடிவுகளும் பரிசீலிக்கப்பட்டன. இதையடுத்து, சீரம் நிறுவனம், மனிதர்களிடம் 2-ம் மற்றும் 3-ம் கட்ட பரிசோதனை மேற்கொள்ள, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து, சீரம் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது, ஆக்ஸ்போர்டு பல்கலை கொரோனா தடுப்பூசியை மனிதர்களிடம் செலுத்தி ஆய்வு செய்து வருகிறது.

இதில், இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஆய்வுகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்து இருக்கும் கோவிஷீல்டு என்ற கொரோனா தடுப்பூசியை, ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்துடன் சீரம் இன்ஸ்டிடியூட் இணைந்து தயாரிக்க உள்ளது. இந்த தடுப்பூசியின் விலையை 3 டாலர்கள் (ரூபாய் மதிப்பில் 225) என்ற அளவில் விலை நிர்ணயம் செய்துள்ளதாகவும் சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது.

Related Stories:

>