முத்தமிழறிஞர் கலைஞரின் 2ம் ஆண்டு நினைவு தினம்: மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மலர்தூவி மரியாதை.!!!

சென்னை: முத்தமிழறிஞர் கலைஞரின் 2ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மலர்தூவி மரியாதை செலுத்தினார். முத்தமிழ் அறிஞர் கலைஞரின் இரண்டாவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, இன்று காலை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன், திமுக பொருளாளர் துரை முருகன், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கனிமொழி, கலாநிதி வீராசாமி உள்ளிட்டோரும் மெரினா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்துகிறார். பின்னர், சென்னை அண்ணா அறிவாலயத்தில், கலைஞர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். அதன்பிறகு, திருக்குவளையில் கலைஞர் சிலையை காணொலி காட்சி வாயிலாக மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். கலைஞரின் 2ம் ஆண்டு நினைவு தினத்தை கொரோனா நோய் தொற்றில் இருந்து தமிழக மக்களை காப்பாற்றிட இரவு, பகல் பாராது கண் துஞ்சாது தங்களின் குடும்ப சுக துக்கங்களை எல்லாம் துறந்து மறந்து,

தியாக உணர்வுடன் பணியாற்றிய-பணியாற்றி வரும் ‘கொரோனா போராளிகள்’ என்று அழைக்கப்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறை ஊழியர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர் உள்ளிட்ட அனைத்து முன்கள பணியாளர்களுக்கும் சிறப்பு செய்ய வேண்டும். வாழ்வாதாரத்தை தொலைத்து விட்டு ஆங்காங்கே வறுமையின் கோரப்பிடியில் சிக்கி சுழலும் ஏழைகளுக்கு, நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: