மதுரையில் அங்கொட லொக்காவுக்கு உதவிய பெண் வக்கீல், அவரது உறவினர் வீடுகளில் சிபிசிஐடி விசாரணை..!!

மதுரை: கொலை செய்யப்பட்ட இலங்கை தாதா அங்கொட லொக்காவுக்கு மதுரையில் உதவியவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இலங்கையை சேர்ந்த நிழல் உலகின் தாதா அங்கோட லோக்கா கொலை செய்யப்பட்டாரா? அல்லது தானாக மரணமடைந்தாரா? என்பது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இது தொடர்பாக கோவை போலீசார் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி, ஈரோடை சேர்ந்த ஜானேஸ்வரன் மற்றும் அங்கோட லோக்காவின் காதலி உள்ளிட்ட 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இதனிடையே வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி தான் மதுரையில் அங்கோட லோக்கா தங்குவதற்கான வீடுகளை ஏற்பாடு செய்து தந்துள்ளார். மதுரையில் லோக்கா தொடர்ந்து 6 மாதங்களுக்கு மேலாக தங்கியிருந்துள்ளார் என்ற தகவல் சிபிசிஐடி போலீசாருக்கு தெரியவந்தது. அதுமட்டுமின்றி மதுரையில் இருக்கின்ற மின் மயானத்தில் தான் அவரது உடல் எரிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையிலேயே சிபிசிஐடி போலீசார் டி.எஸ்.பி. பரமசிவம் தலைமையில் மதுரையில் அங்கொட லொக்கா தங்கியிருந்ததாக கூறப்படுகிற பகுதியில் வழக்கறிஞர் சிவகாமி சுந்தரியின் உறவினர்களிடமும், அக்கம்பக்கத்தினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளையும் சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து, அங்கொட லொக்காவின் சர்வதேச தொடர்புகள், வங்கி பரிவர்த்தனைகள் பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கறிஞர் சிவகாமியின் 7 வங்கி கணக்குகளில் சுமார் 1 கோடி ரூபாய் வரை பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

Related Stories: