கொரோனா தடுப்புப் பணியில் உயிரிழந்த 28 முன்கள பணியாளர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணத் தொகை வழங்க தமிழக அரசு உத்தரவு!!

சென்னை : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முன்கள பணியாளர்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணத் தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க சுகாதாரத்துறையினர் கடுமையாக

போராடி வருகின்றனர். இதில் முன்கள பணியாளர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள், காவல்துறையினர், அரசு அதிகாரிகள் பங்கேற்று வருகின்றனர். சில நேரங்களில் அவர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு, அவர்களை மரணம் வரை கொண்டு சென்று விடுகிறது.

கொரோனா பரவலை தடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் முன்கள பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கொரோனா பேரிடர் காலத்தில் உயிரை பணையம் வைத்து உழைத்து கொண்டிருக்கும் முன்கள பணியாளர்கள் பணியின் போது உயிரிழந்தால் அவர்களுக்கு நிவாரண தொகை அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.இந்த நிலையில், கொரோனாவால் உயிரிழந்த 28 முன்கள பணியாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையின் டீன் சுகுமாரன், மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுருகன் உட்பட 28 பேர் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிப்பதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

Related Stories: