ஒலி, ஒளி அமைப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தாம்பரம்: கொரோனா ஊரடங்கால் பொது நிகழ்ச்சிகள் மற்றும் கோயில் விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ஒலி, ஒளி அமைப்பாளர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தாம்பரம் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர் பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்துகொண்டு அரசு தங்களது வாழ்வாதாரத்தை முன்நிறுத்தி தங்களுக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும். அரசு தங்களது பணியினை தொடர்ந்து செய்ய தளர்வுகள் அனுமதிக்க வேண்டும். பணியினை செய்ய வாடகைக்கு எடுத்துள்ள வணிக வளாகத்திற்கு வருவாய் இல்லாத காரணத்தினால் ஊரடங்கு காலங்களில் வாடகையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: