8 வழிச்சாலை மேல்முறையீட்டு வழக்கு விவகாரம் நீதி கேட்டு விவசாயிகள் மண்டியிட்டு போராட்டம்: கால்நடைகளுடன் திரண்டதால் பரபரப்பு

சேலம்: சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள மத்திய அரசு, இதனை விரைவாக விசாரிக்கும்படி கேட்டு மனு செய்துள்ளது. இதனை கண்டித்தும், மேல்முறையீட்டை திரும்ப பெறவும் வலியுறுத்தியும், இத்திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நேற்று, சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கால்நடைகளுடனும், தரையில் மண்டியிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அடிமலைப்புதூரில் பெண்களுடன் திரண்ட விவசாயிகள், வயலில் இறங்கி மண்டியிட்டு போராட்டம் நடத்தினர். 8 வழிச்சாலை அமைந்தால், தங்களது வாழ்வாதாரமே பறிபோகும் என கதறிய அவர்கள், நீதி வழங்கக்கோரி கோஷம் எழுப்பினர். இதேபோல், பாரப்பட்டி அடுத்த கூமாங்காடு பகுதியில், 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள், ஆடு, மாடு, பூனை, நாய் மற்றும் கோழி உள்ளிட்ட கால்நடைகளுடன் வயலில் திரண்டு, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

Related Stories: