அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா : நாடு முழுவதும் பல இடங்களில் இந்து அமைப்பினர் கொண்டாட்டம்; அமெரிக்காவிலும் சிறப்பு பூஜை

லக்னோ : ராமர் கோயில் பூமி பூஜை ஒட்டி நாடு முழுவதும் பல இடங்களில் இந்து அமைப்பினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடக்கிறது. இதில், பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவை முன்னிட்டு, நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலக வாயில் வண்ண கோலங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. காசியாபபாத்தில் இந்து அமைப்பினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்படுவதை ஒட்டி கர்நாடகாவில் அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள கேபிடல் மலைக்கு வெளியே இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர்.

* அமெரிக்காவிலும் சிறப்பு பூஜைகள்

அமெரிக்காவில் வசிக்கும் இந்துக்கள் பூமி பூஜை நடைபெறும் நேரத்தில் வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு நடத்துகின்றனர். அங்குள்ள கோயில்களிலும் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல நியூயார்க் பகுதியிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. புகழ்பெற்ற டைம்ஸ் ஸ்கொயர் பகுதியில் பிரம்மாண்ட விளம்பரப் பலகைகள் வைக்கப்படும் எனவும் அங்கு ராமரின் புகைப்படங்கள், அயோத்தி ராமர் கோயிலின் முப்பரிமாணப் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: