மாதத்திற்கு ஒருமுறை மின்கட்டண கணக்கீடு செய்வது குறித்து முதல்வருடன் ஆலோசிக்கப்படும்: மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பேட்டி..!!

சென்னை: மாதத்திற்கு ஒருமுறை மின்கட்டண கணக்கீடு செய்வது குறித்து முதல்வருடன் ஆலோசிக்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். கொரோனாவால் உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் தரப்படும் என் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, மின் கணக்கீடு செய்யாததால், வீட்டு உபயோக தாழ்வழுத்த மின் நுகர்வோர், முந்தைய மாதத்திற்கு செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் செலுத்தலாம் எனவும், பின்னர் மின்சார கணக்கீடு செய்யும் போது, இரண்டு இரு மாதங்களுக்கும் சேர்த்து மின்சார பயன்பாடு கணக்கிட்டு, முந்தைய மாத கட்டணத்தின் அடிப்படையில் செலுத்தப்பட்ட தொகையை கழித்து விட்டு, மீத தொகைக்கு பில் செலுத்த வேண்டும் எனவும் மின்சார வாரியம் அறிவித்துள்ளது

வீட்டு உபயோக மின்சாரத்திற்கு 100 யூனிட்டுக்கும் குறைவான மின்சாரம் பயன்படுத்திய வாடிக்கையாளருக்கு ஒரு யூனிட்டுக்கு 2.50 ரூபாயும், 100 முதல் 200 யூனிட் வரைக்கும் யூனிட்டுக்கு 2.50 ரூபாயும், 200 முதல் 500 வரை யூனிட்டுக்கு 200 யூனிட் வரை 2.50 ரூபாயும், 201 முதல் 500 யூனிட் வரை 3 ரூபாயும் என, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கட்டணம் நிர்ணயித்துள்ளது.

இதில், அரசு மானியத்தை சேர்த்து, முதல் 100 யூனிட்டுக்கு குறைவான மின் பயனாளிகளுக்கு மின் கட்டணம் இல்லை. 101 – 200 வரை 1.50 ரூபாயும்; 200 முதல் 500-க்குள் மின் நுகர்வு வாடிக்கையாளருக்கு முதல் 100 யூனிட்களுக்கு கட்டணம் இல்லை. அதன்பின் 101 – 200 வரையிலான யூனிட்களுக்கு ஒரு யூனிட்டுக்கு 2 ரூபாயும், 201 – 500 யூனிட்களுக்கு யூனிட்டுக்கு 3 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது, மாதத்திற்கு ஒருமுறை மின்கட்டண கணக்கீடு செய்வது குறித்து முதல்வருடன் ஆலோசிக்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

Related Stories: