மதுரை உசிலம்பட்டி அருகே பழமையான நடுகல் கண்டெடுப்பு..!! தொல்லியல் துறை துறை ஆய்வு நடத்த கிராம மக்கள் கோரிக்கை!!!

மதுரை:  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே 500 ஆண்டுகள் பழமையான நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் தொல்லியல் துறை ஆய்வு நடத்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உசிலம்பட்டி பகுதியில் மேற்குதொடர்ச்சிமலை அடிவாரத்தில், கடந்த சில மாதங்களாக பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது 500 ஆண்டுகள் பழமையான நடுகல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அதாவது  நள்ளிதேவன் மொட்டைமலையில் 8 அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்ட மிகப்பெரிய நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுகுறித்து ஆய்வு செய்ததில் இந்த பகுதியில் வணிகம் செய்ததற்கான அடையாளங்களும் கிடைத்துள்ளன. இதனையடுத்து மேற்குதொடர்ச்சிமலையின் உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கீழடியில் கிடைத்துள்ள பழமையான பொருட்களை போன்றே, இந்த பகுதியிலும் பழமையான பொருட்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகளவு இருப்பதாக அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related Stories: