ஆன்லைன் வகுப்பு பிரச்சனையில் இரு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது ஓரிரு தகவல்கள்!: அமைச்சர் செங்கோட்டையன் பேச்சால் சர்ச்சை..!!

ஈரோடு: ஆன்லைன் வகுப்பு பிரச்சனையில் இரு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது ஓரிரு தகவல்கள் மட்டுமே என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனத்திற்காக அவரும் சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி. கருப்பண்ணனும் நீரை திறந்து வைத்தனர். பின்னர் பேசிய அமைச்சர் செங்கோட்டையனிடம் ஆன்லைன் வகுப்பு பிரச்சனையால் தமிழகத்தில் இரு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், இரு மாணவர்கள் தற்கொலைகளை மட்டுமே குறிப்பிட்டாலும் அது பற்றி ஆய்வு செய்து சிறிய தவறு கூட நடக்காத வகையில் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று கூறினார். கேரள மாநிலம் அளபுரத்தில் ஆன்லைன் வகுப்பிற்கு டி.வி. இல்லாததால் 9ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேபோல கோவை பாப்பநாயகன் பாளையத்தில் ஆன்லைனில் படிக்க வற்புறுத்தியதால் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துக்கொண்டார். இதேபோல் பண்ருட்டி அருகே சிறுதொன்மாதேவி என்ற கிராமத்தில் ஆன்லைன் வகுப்பிற்கு செல்போன் வாங்க வசதி இல்லாததால் கூலி தொழிலாளியின் மகன் உயிரிழந்தான். இதுபற்றிய கேள்விக்கே இரு சம்பவங்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளீர்கள் என்று அமைச்சர் கூறினார்.

Related Stories: