முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 15% சரிவு: தொடர்ந்து 4 மாதங்களாக பின்னடைவு

புதுடெல்லி: முக்கிய 8 துறைகளின் உற்பத்தி கடந்த ஜூன் மாதத்தில் 15 சதவீதம் சரிந்துள்ளது.  நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரம், உருக்கு, சிமென்ட் மற்றும் மின்சாரம் ஆகியவை, முக்கிய 8 துறைகளாக உள்ளன. இவற்றின் உற்பத்தி குறித்து மத்திய அரசு புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது. அதில், உர உற்பத்தியை தவிர நிலக்கரி (15.5%), கச்சா எண்ணெய் (6%), இயற்கை எரிவாயு (12%), சுத்திகரிப்பு (8.9%) ஸ்டீல் (33.8%), சிமென்ட் (6.9%), மின் உற்பத்தி (11%) குறைந்ததால், முக்கிய 8 துறைகளின் உற்பத்தி கடந்த ஜூன் மாதத்தில் 15 சதவீதம் சரிந்துள்ளது. இது தொடர்ந்து 4வது மாதமாக ஏற்பட்ட சரிவாகும். கடந்த மே மாதத்தில் 22 சதவீதம் சரிந்தது.  நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை மேற்கண்ட முக்கிய துறைகளின் உற்பத்தி 24.6% சரிந்துள்ளது என மத்திய அரசு புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: