விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஏரியை ஆக்கிரமித்து சாகுபடி!: டிராக்டர்களை கொண்டு பயிர்களை அழித்ததால் விவசாயிகள் வேதனை!!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆக்கிரமித்து சாகுபடி செய்த பயிர்களை டிராக்டர்களை கொண்டு அழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பாரதிபுரம் கிராமத்தில் 164 ஏக்கர் பரப்பளவில் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியின் 75 அளவு பரப்பளவை பெரியநுளம்பை, சஞ்சீவிராயன்பேட்டை கிராமங்களை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து பயிர் சாகுபடி செய்துள்ளனர். அதோடுமட்டுமல்லாமல் வீடுகளையும் கட்டியுள்ளனர்.

இந்நிலையில், விதிகளை மீறி ஏரியை ஆக்கிரமிப்பு செய்ததால், பாரதிபுரம் கிராம மக்கள் அதிகாரிகளின் துணையோடு அதனை மீட்டனர். அதாவது நிலங்களை ஆக்கிரமித்து சாகுபடி செய்த பயிர்களை ட்ராக்டர்களை கொண்டு அளித்தன. இதனை கண்ட விவசாயிகள் கதறி அழுதனர். கொரோனா காலத்தில் ஏற்கனவே நாங்கள் அனைவரும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம்.

இந்த நிலையில், கடன் வாங்கி சாகுபடி செய்த பயிர்கள் விளைச்சல் தரும் நேரத்தில் ட்ராக்டர்களை கொண்டு அழித்துவிட்டதாக வேதனை தெரிவித்தனர். மேலும், ஆக்கிரமிப்பை அகற்றுகிறோம் என்ற பெயரில் பயிர்களை அளித்து சேதம் விளைவித்துவிட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். பின்னர் ஏரியிலிருந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டவுடன் அந்த பகுதியில் எல்லை கற்கள் நடப்பட்டன.

Related Stories: