தமிழகம் வர விரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்.! நெகட்டிவ் என்ற சான்றிதழுடன் தமிழகம் வரலாம்..!!

சென்னை: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் தமிழகம் வருவதற்கான நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இந்தியா முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கொரோனாவால் ஊரடங்கு அனைவரது இயல்பு வாழ்க்கைக்கும் முட்டுக்கட்டையாக  அமைந்தது.  இதானல் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியது. அந்த நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கினர். நடந்தோ, சைக்கிள்களிலோ, இருசக்கர வாகனங்களிலோ, பஸ் லாரிகளிலோ சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் இபாஸ் கட்டாயம் என்று அரசுகள் முடிவு செய்தது. எவ்வாறு சொந்த ஊர்களுக்கு செல்வது என்று தெரியாமல் திகைத்தார்கள்.

அப்போது புலம்பெயர்ந்தோர் சிறப்பு ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. தமிழ்நாட்டில் பல நகரங்களில் இருந்து 259 சிறப்பு ரெயில்கள் மூலம் புறப்பட்டு பல மாநிலங்களுக்கு தொழிலாளர்கள், மாணவர்கள் என கிட்டத்தட்ட அனைவரும் சென்றுவிட்டனர். இதை தொடர்ந்து சொந்த ஊருக்கு சென்றவர்கள் கையில் இருந்த பணம் முழுவதும் செலவானது. அங்கேயும் வேலையில்லாமல், வருமானம் இல்லாமல் மிகுந்த கஷ்டத்தில் உள்ளனர். தற்போது தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் தான் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் தமிழகம் திரும்புகின்றனர். இதனை தொடர்ந்து பணிக்கு திரும்ப விரும்பும் தொழிலாளர்கள் பிசிஆர் பரிசோதனையில் நெகட்டிவ் என்ற சான்றிதழுடன் தமிழகம் வரலாம் என்று தொழில்துறை நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. பிசிஆர் பரிசோதனைக்கு தேவையான கட்டணத்தை அந்தந்த தொழில் நிறுவனங்களே செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. யாருக்காவது ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டால் சிகிச்சை கட்டணத்தையும் தொழில் நிறுவனங்களே ஏற்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: