சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 5ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது புகைப்படத்திற்கு தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் மலரஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு தினம் இன்று!!ஆண்டுதோறும் அப்துல் கலாம் நினைவுதினமான ஜூலை 27-ம் தேதி ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பு என்ற இடத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஏராளமான பொதுமக்களும், மாணவர்களும், இளைஞர்களும் நினைவஞ்சலி செலுத்துவர். இந்தாண்டு கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பெரியளவில் அப்துல் கலாம் நினைவிடத்திற்கு யாரும் செல்லவில்லை. ஆகவே அப்துல் கலாமை நினைவு கூறும் விதமாக அவரது பொன்மொழிகளையும், திருவுருவப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு மரியாதை செலுத்தி வருகின்றனர்.