பெரிய வணிக நிறுவனங்களை மறுஉத்தரவு வரும்வரை மூடவேண்டும்: சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் மார்க்கெட்டுகள் மற்றும் பெரிய வணிக நிறுவனங்களில் விதிகளை பின்பற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. விதிகளை பின்பற்றாத கடைகள் 14 நாட்கள் சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சென்னையில் உள்ள வணிக நிறுவனங்களில் இந்த விதிகள் பின்பற்றப்படுவதில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள வணிக வளாகங்கள் அனைத்தையும் மறு உத்தரவு வரும் வரை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இதன்படி தி.நகர், புரசைவாக்கம், பாடி உள்ளிட்ட இடங்களில் செயல்படும் பெரிய வணிக நிறுவனங்கள் அனைத்தும் மறு உத்தரவு வரும் வரை மூடி இருக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி பணியாளர்கள்  ஒலிபெருக்கி மூலம் தி.நகர் உள்ளிட்ட இடங்களில் அறிவிப்பு செய்து வருகின்றனர்.

Related Stories: