சச்சின் பைலட், 18 எம்எல்ஏ.க்கள் பதவி பறிப்பு வழக்கில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க அனுமதி: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு; சபாநாயகர் கோரிக்கை நிராகரிப்பு

புதுடெல்லி: ராஜஸ்தானில் சச்சின் பைலட் உட்பட 19 எம்.எல்.ஏக்களி்ன் பதவி பறிப்பு வழக்கில், ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவை பிறப்பிக்க எந்தவித தடையும் கிடையாது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக, துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட், தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேருடன் சேர்ந்து ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாகவும், கட்சியின் எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் கொறடா உத்தரவை மீறியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. காங்கிரஸ் அளித்த புகாரின் பேரில், கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி இவர்களின் பதவியை பறிப்பது தொடர்பாக கடந்த வாரம் சபாநாயகர் சி.பி.ஜோஷி நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த நோட்டீசுக்கு எதிராக பைலட் உட்பட 19 எம்எல்ஏ.க்களும், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதை விசாரித்த நீதிமன்றம், பைலட் உட்பட 19 பேரின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று சபாநாயகருக்கு உத்தரவிட்டது. இந்த தடையை இன்று வரை நீட்டித்து, இருதினங்களுக்கு முன் புதிய உத்தரவும் பிறப்பித்தது. மேலும், பைலட் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப் போவதாகவும் அறிவித்தது. இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து நேற்று முன்தினம் சபாநாயகர் சி.பி. ஜோஷி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

அதில், ‘சச்சின் பைலட் உட்பட 19 எம்.எல்.ஏக்கள்  பதவி நீக்க நோட்டீஸ் விவகாரத்தில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது. அதற்கான அதிகாரம் அதற்கு கிடையாது. அதனால், உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவும் தடை விதிக்க வேண்டும்,’ என குறிப்பிட்டிருந்தார். இந்த மனு, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர்.கவாய் மற்றும் கிருஷ்ணா முராரி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜோஷி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தனது வாதத்தில், பதவி நீக்கம் விவகாரத்தில் சபாநாயகர் எடுக்கும் முடிவே இறுதியானது. பைலட் உள்ளிட்டோரை காப்பாற்றும் விதமாக, ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதை ஏற்க முடியாது. டும்,’’ என்றார். பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், உயர் நீதிமன்றம் என்னதான் உத்தரவு பிறப்பிக்கப் போகிறது என்பதை அறிய, சபாநாயகர் தரப்பால் ஒரு நாள் காத்திருக்க முடியாதா? அதனால்ம் தேதி (இன்று) உத்தரவு பிறப்பிக்க ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு எந்த தடையும் விதிக்க முடியாது ,’’ என்றனர்.

* இன்று காலை 10.30க்கு தீர்ப்பு

சபாநாயகர் அனுப்பிய பதவி பறிப்பு நோட்டீசை எதிர்த்து சச்சின் பைலட் உட்பட 19 எம்எல்ஏ.க்களும் தொடர்ந்துள்ள வழக்கில், இன்று காலை 10.30க்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது. இதில், யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதை அறிய, இம்மாநில மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

* அமெரிக்காவுக்கு அனுப்பலாம்

முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில், ``காங்கிரஸ் எம்எல்ஏ.க்களுடன் மத்திய அமைச்சர் ஷெகாவத் பேரம் பேசிய ஆடியோ ஆதாரத்தை தடயவியல் சோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பலாம். குரல் சோதனைக்கு ஷெகாவத் ஏன் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்?, என்றார்.

* தவறுகளை சுட்டிக்காட்ட கூடவா உரிமையில்லை?

சபாநாயகர் ஜோஷி சார்பில் கபில் சிபல் வாதிட்ட போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘ஆட்சியில் இருக்கக் கூடிய தவறுகளை தானே எம்.எல்.ஏக்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு இதற்கு கூடவா உரிமை கிடையாது? அவ்வாறு இல்லையென்றால் மக்களாட்சி என்று எப்படி கூற முடியும்?’ என அடுக்கடுக்கான என கேள்விகளை எழுப்பினர்.

Related Stories: