மயிலாடுதுறை அருகே கெயில் நிறுவன குழாயில் திடீர் கசிவு...! குழம்பு போல வாயு வெளியேறியதால் கிராம மக்கள் பீதி!!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கெயில் நிறுவன குழாயிலிருந்து திடீரென கசிவு ஏற்பட்டு பீறிட்டு எழுந்த வாயுவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி சீர்காழி வட்டம்  மாதானம் முதல் மேமாத்தூர் வரை சுமார் 29 கி.மீ தொலைவிற்கு கெயில் நிறுவனம் புதிதாக எரிவாயு குழாய்களை பதித்துள்ளது. இந்த குழாய் பணியின், இறுதி கட்ட பணிகளை தற்போது கெயில் நிறுவன பணியாளர்கள்  மேற்கொண்டிருந்தனர்.

அப்போது மேமாத்தூரில் பணியின்போது திடீரென குழாய் வெடித்து தென்னைமர உயரத்திற்கு குழம்பு போல வாவு பீறிட்டு அடித்தது. இதுகுறித்து கெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது, குழாயை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றபோது,  காற்றழுத்தத்தின் காரணமாக புழுதியுடன் தண்ணீரும், மணலும் வெளியேறியதாக விளக்கமளித்துள்ளனர். ஆனால் இதனை அப்பகுதி கிராம மக்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இதேபோல் ஏற்கனவே ஒரு மாதத்திற்கு முன்பு நாங்கூரில் எரிவாவு  குழாய் வெடிப்பு ஏற்பட்டுள்ளதை விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, வேளாண் பாதுகாக்கப்பட்ட மண்டலத்தில் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், இதுபோன்று குழாய்கள் அடிக்கடி வெடித்து விவசாயம் நாசமடைவதால், கெயில்  நிறுவனத்தின் குழாய்களை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனை நிறுவனத்தினர் ஏற்காவிட்டால் குழாய்களை கிராம மக்களே இணைந்து அகற்றுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன் காரணமாக அப்பகுதில் பரபரப்பு  நிலவி வருகிறது.

Related Stories: