கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு

ஜம்மு: கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமர்நாத் மலை குகையில் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஏராளமானோர் யாத்திரை செல்வர். ஜம்மு - காஷ்மீர் பாதல்காம், அனந்த்நாக்கில் பனிலிங்கத்தை மே முதல் ஆகஸ்ட் வரை தரிசிப்பது வழக்கம்.

ஜம்மு காஷ்மீரின் இமாலய மலையில் அமைந்துள்ள அமர்நாத் பனிலிங்க தரிசன புனித யாத்திரை இன்று தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக யாத்திரை நாட்கள் 15 நாட்களாகச் சுருக்கப்பட்டு ஆகஸ்ட் 3-ம் தேதி முடிவடைவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் அமர்நாத் பனிமலை அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள குகையில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கமாக உள்ளது.

Related Stories: