உப்புத்துறை கருப்பசாமி கோயிலில் களையிழந்த ஆடி அமாவாசை திருவிழா

வருசநாடு: தேனி மாவட்டம், வருசநாடு அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற உப்புத்துறை மாளிகைப்பாறை கருப்பசாமி கோவில் உள்ளது. இங்கு சித்திரை மற்றும் ஆடி அமாவாசை திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடக்கும். இதில், தேனி மாவட்ட பக்தர்கள் மட்டுமல்லாமல் திண்டுக்கல், மதுரை, புதுச்சேரி உள்ளிட்ட பல ஊர்களைச் சேர்ந்த பக்தர்கள் வந்து செல்வர். இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் உப்புத்துறை கோயிலில் ஏற்கனவே சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது.

நேற்று ஆடி அமாவாசை திருவிழாவும் ரத்து செய்யப்பட்டது. இதனால், பக்தர்கள் வருகையின்றி விழா களையிழந்தது. இது குறித்து கடமலைக்குண்டு இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் கூறுகையில், ‘வருசநாடு அருகே உள்ள உப்புத்துறை மாளிகைப்பாறை கருப்பசாமி கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வரவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம். கோயில் வழியில் சோதனைச் சாவடி அமைத்து போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்’ என்றார்.

Related Stories: