கந்த சஷ்டி கவசம் வீடியோ வெளியிட்ட விவகாரம் கருப்பர் கூட்டம் சுரேந்தர் ஜாமீன் கோரி மனு தாக்கல்: எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணை

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாஜ மற்றும் இந்து மக்கள் கட்சியினர் புகார் ஒன்றை அளித்தனர். அதில், கறுப்பர் கூட்டம் என்ற யுடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்தை மிகவும் கொச்சைப்படுத்தி, இழிவாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவை சுரேந்தர் (எ) நாத்திகன் (33) மற்றும் தயாரிப்பாளர், எடிட்டர் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இந்தனர்.

அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் கறுப்பர் கூட்டம் நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து கடந்த 16ம் தேதி இந்த வீடியோவை வெளியிட்ட சுரேந்தர் (எ) நாத்திகன் புதுச்சேரி, அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி சுரேந்தர் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அரசியல் ஆதாயத்திற்காகவும், மலிவான விளம்பரத்திற்காகாகவும் என் மீது பாஜ புகார் அளித்துள்ளது. மேலும்  அந்த பதிவும் தற்போது நீக்கப்பட்டுவிட்டது. புதுச்சேரியில் சரண்டைந்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்கு என்பதால் சென்னை கொண்டுவரப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளேன். என் மீது பதியப்பட்டுள்ள வழக்கில் எந்த உண்மையும் இல்லை. ஜாமீன் வழங்கினால் சாட்சி மற்றும் ஆதாரங்களை கலைக்க மாட்டேன் விசாரணைக்கு ஒத்துழைப்பேன். என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Related Stories: