CA படிப்பிற்கு இணையவழி வகுப்புகள் வரும் 22ம் தேதி தொடக்கம்!: இந்திய கணக்கு தணிக்கையாளர் அமைப்பு அறிவிப்பு

சென்னை: சி.ஏ. எனப்படும் கணக்கு தணிக்கையாளர் படிப்பிற்கு இணையவழி வகுப்புகள் வரும் 22ம் தேதி தொடங்கவுள்ளதாக இந்திய கணக்கு தணிக்கையாளர் அமைப்பு அறிவித்துள்ளது. இந்திய பட்டய கணக்காளர் சங்கத்துடன் இணைந்து பள்ளிக்கல்வித்துறை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்கனவே சி.ஏ நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியை வழங்கி வருகின்றது. அதன்படி 22 மாணவர்கள் கடந்த ஜூன் 10ம் தேதி முதல் தங்களுடைய பயிற்சியை தொடங்கிய நிலையில், தேர்வு எழுத உள்ள மேலும் சில மாணவர்களுக்கு வருகிற 22ம் தேதி முதல் பயிற்சி தொடங்கப்பட உள்ளது .

இதை தொடர்ந்து, நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள CA தேர்வுக்கு தயாராகும் வகையில், அக்டோபர் மாதம் வரை இந்த வகுப்புகள் நடைபெறவுள்ளன. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் இலவசமாக இந்த வகுப்புகளில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. sirc.foundation@icai.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விவரங்களை அனுப்பி பதிவு செய்தால், இணையவழி வகுப்பில் சேர்வதற்கான வழிமுறைகள் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தனியார் பள்ளி மாணவர்கள் 9 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் செலுத்தி, இணையவழி வகுப்பில் சேரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: