திருப்பத்தூரில் வீடு இடிந்து விழுந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த விவகாரத்தில், ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்!!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வானியபாடியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடிசை வீடு இடிந்து விழுந்து உயிரிழந்த விவகாரத்தில் ஊராட்சி செயலாளர் வஜ்ஜிரவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட புருஷோத்தம குப்பம் கிராமத்தில் குடிசை வீட்டில் அய்யம்மாள் (மனநலம் பாதிக்கப்பட்டவர்) என்பவர் தனது மகனுடன் வசித்து வந்துள்ளார்.

அய்யம்மாளின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவே இறந்து விட்டார். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அப்பகுதில் பலத்த காற்றுடன் கனமழை பெய்துள்ளது. இதனால், குடிசை வீடு இடிந்து விழுந்து விபத்துள்ளானது. அப்போது வீட்டில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட அய்யம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடந்தன. பின்னர், காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ், சுப்பிரமணி-அய்யம்மாள் என்ற பெயரில் 2017-2018ம் ஆண்டில் வீடு கட்டபட்டதாக வங்கி கணக்கில் பணம் பரிமாற்றம் செய்து முறைகேட்டில் கிராம செயலாளர் வஜ்ஜிரவேல் ஈடுபட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதாவது அய்யம்மாளுக்கு பதிலாக ஊராட்சி செயலாளர் உறவினர்களின் அக்கௌன்ட் நம்பரை கொண்டு மோசடியில் ஈடுபட்டு ரூ.1.70 கோடி அபகரித்துளார். ஆனால் அய்யம்மாள் வீடு கட்டப்படாமல் குடிசை பகுதியிலேயே வசித்து வந்துள்ளார். இந்த தகவலை அறிந்த மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக, வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணைய பொறுப்பு தலைவர் துறை ஜெயசந்திரன், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இந்நிலையில், விசாரணை நடைபெற்று முடிவுற்ற நிலையில், மோசடியில் ஈடுபட்டு வந்த ஊராட்சி செயலாளர் வஜ்ஜிரவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: