எஸ்.ஐ தேர்வை ரத்து செய்யகோரிய வழக்கில் உள்துறை செயலாளர் பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு!!!

மதுரை:  எஸ்.ஐ தேர்வை ரத்து செய்யகோரிய வழக்கில் உள்துறை செயலாளர் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் தென்னரசு என்பவர், மதுரை கிளையில் ஒரு பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கடந்த மார்ச் மாதம் 2019ம் ஆண்டு காவல் துறையில் உள்ள சார்பு-ஆய்வாளர் பணிக்கான, தேர்வு அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டிருந்தது.

இதில் 969 பணியிடங்கள் இருந்தன. இந்நிலையில், தேர்வு அறிவிப்பாணைக்கு ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். மேலும், இதற்கான எழுத்து தேர்வும் கடந்த மாதம் ஜனவரி 12,13ம் தேதிகளில் நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து, எழுத்து தேர்வுக்கான முடிவுகள் கடந்த மார்ச் 16ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த தேர்வு முடிவுகளில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் குறிப்பாக வேலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் ஒரே சென்டரில் நடைபெற்ற தேர்வில் ஏராளமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, தேர்வு எழுதப்பட்ட மையங்களில் சிசிடிவி கேரமா முறையாக செயல்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் சார்-ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதால், இந்த தேர்வினை ரத்து செய்து, தமிழக அரசு மீண்டும் அறிவிப்பாணையை வெளியிடவேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவானது தற்போது விசாரணைக்கு வந்துள்ளது. விசாரணையின்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் ஆஜராகி பல்வேறு முறைகேடுகளை பற்றி தொடர்ந்து வாதாடினார். இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் இந்த முறைகேடுகள் தொடர்பாக, தற்போது, தமிழக உள்துறை செயலாளர் மற்றும் டி.ஜி.பி ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அடுத்த வாரம் ஒத்தி ஒத்திவைத்துள்ளனர்.

Related Stories: