இந்தியாவில் 2023 மார்ச் முதல் தனியார் ரயில் சேவை பயன்பாட்டுக்கு வரும்: மத்திய ரயில்வே அமைச்சகம் தகவல்..!!

டெல்லி: இந்தியாவில் 2023 மார்ச் முதல் தனியார் ரயில் சேவை பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய ரயில்வே அமைச்சகம் சார்பில் தகவல் தெரிவித்துள்ளது. தனியார் ரயில் சேவைக்கான டெண்டர் விடும் பணிகள் 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவடையும் எனவும் கூறப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ரயில்வே துறை தனியார் வசமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த தகவல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்குப் பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

ரயில்வே துறை தனியார் வசம் சென்றால் வேலை வாய்ப்பு இழக்கப்படும், ரயில் கட்டணம் உயரும் என பல கருத்துகள் முன் வைக்கப்படுகின்றன. இதுகுறித்து ரயில்வே வாரியத் தலைவர் வி.கே. யாதவ் அளித்த பேட்டியில்: ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதால் யாருக்கும் வேலைவாய்ப்பு பறிபோகாது. புதிய தொழில்நுடப்ங்கள் அமல்படுத்தப்படும். இதனால், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்  என கூறினார். ரயில்வே துறையில் சில வழித்தடங்களில் மட்டுமே தற்போது தனியார் மயமாக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வருவாயில் குறிப்பிட்ட பங்கை, இந்திய ரயில்வேக்கு வழங்க வேண்டும் என்றும், ரயில்களை குறித்த நேரத்தில் இயக்கும் விதியை கடைப்பிடிக்க வேண்டும்.  தவறினால் பட்சத்தில், நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதில் பம்பார்டியர் இந்தியா, அதானி போர்ட்ஸ், டாடா ரியாலிட்டி, பிரான்சின், அல்ஸ்தாம், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த, டல்கோ, மெக்குயர் குழுமம் ஆகியவை, இந்தியாவில் தனியார் ரயில் போக்குவரத்தை மேற்கொள்ள ஆர்வமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: