சென்னை மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரங்கள் வெளியீடு: கடந்த 24 மணி நேரத்தில் 35 பேர் பலி; இதுவரை 83,377 பேர் பாதிப்பு...!!!

சென்னை: சென்னையில், மண்டல வாரியாக கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின்  எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனாவால்  பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.

சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 83,377 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1249 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,376 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 35 பேர்  உயிரிழந்துள்ளனர். இதுவரை 67,077 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 14,923 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதை தவிர்த்து பிற மாவட்டங்களை சேர்ந்த 1,890 பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 58.34 சதவீதம், பெண்கள் 41.66 சதவீதம். நேற்று (17/07/2020 )மட்டும் சென்னையில்  12,259 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில், மண்டல வாரியாக  கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில், சிகிச்சை பெற்று வருபவர்களின் பட்டியலை இன்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:-

* அந்த பட்டியலில், திருவொற்றியூர் மண்டலத்தில் 527 பேரும், மணலியில் 205 பேரும்,  மாதவரத்தில் 386 பேரும் சிகிச்சையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

* தண்டையார்பேட்டை மண்டலத்தில் 816 பேரும்,  ராயபுரத்தில் 1,146 பேரும், திருவிக நகரில் 1,042 பேரும், சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* அம்பத்தூர் மண்டலத்தில் 893 பேரும், அண்ணா நகர் மண்டலத்தில் 1,609 பேரும், தேனாம்பேட்டையில் 1,441 பேரும் , கோடம்பாக்கத்தில் 2,099 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* வளசரவாக்கத்தில் 720 பேரும், ஆலந்தூர் மண்டலத்தில் 449 பேரும், அடையாறு மண்டலத்தில் 1,002 பேரும்  பெருங்குடியில் 354 பேரும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 344 பேரும் , பிற மாவட்டங்களை சேர்ந்த 1890 பேர் கொரோனா  பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Related Stories: