சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ பால்துரையின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவு..!!

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ பால்துரையின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எஸ்.ஐ. பால்துரையின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம், கொலை வழக்காகப் பதிவு செய்து காவலர்கள் கைது செய்யப்பட்டு தற்போது சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையிலிருக்கும் எஸ்.ஐ பால்துரை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், ஜெயராஜ், பென்னிக்ஸ் கைது செய்யப்பட்ட வழக்கின் முக்கிய ஆவணங்களான காவல் நிலைய மெடிக்கல் மெமோ, அரசு மருத்துவரின் அறிக்கை ஆகியவை மறைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜுன் 22 ஆம் தேதி ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் சார்பில் சாத்தான்குளம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுவில் ஜெயராஜ் நீரழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் நோய் காரணமாக தொடர் சிகிச்சையில் தினசரி மருந்துகள் சாப்பிடுவதாகவும் பென்னிக்ஸ் கிட்னியில் கல் இருக்கும் நோயால் அவதி படுவதாகவும்  கூறியுள்ளனர்.

இந்த நிலையில் பெண் காவலர் ரேவதி தயாரித்த மெடிக்கல் மெமோ மற்றும் அரசு மருத்துவர் அறிக்கையில் காயங்கள் இருந்ததாகக் கூறப்படவில்லை. அவற்றைப் பின்பற்றி மாஜிஸ்திரேட் ரிமான்ட் செய்துள்ளார். அனைத்து ஆவணங்களும் மறைக்கப்பட்டுள்ளது. ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொரோனா நோயால் இறந்திருக்கலாம். எனவே இந்த வழக்கில் எந்த விதத்திலும் தொடர்பில்லாத தனக்கு ஜாமின் வழங்குமாறு பால்துரை மனுவில்  கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ஐ. பால்துரையின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: